Breaking News

விளையாடிக்கொண்டிருந்த சிறுவா்கள் மீது இராணுவ சிப்பாய் தாக்குதல்

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது இராணுவ சிப்பாய் ஒருவர் மிலேச்சத்தனமாகத் தாக்கியுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்றைய தினம் கிளி.பாரதிபுரம் என்னும் இடத்தில் தமது வீட்டுக்கு முன்னால் விளையாடிக் கொண்டிருந்த இரு பிள்ளைகள் மீது அங்கு வந்த இராணுவ சிப்பாய் மிலேச்சத்தனமாகத் தாக்கியுள்ளார். இதில் ஆறு வயது சிறுமி மற்றும் இரண்டரை வயது சிறுவன் மீதே இவ்வாறு தாக்ககுதல் நடத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அந்த இராணுவ சிப்பாயை பிடிக்க வந்த மற்றுமொரு கிராமவாசியும் அவரது தாக்குதலுக்கு உள்ளாகினார். அதன் பின்னர் அங்கு கூடிய மக்களால் அந்த இராணுவச் சிப்பாய் பிடிக்கப்பட்டு இராணுவ முகாமில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அப்போது அந்த இராணுவத்திற்கு மனநோய் என கூறி அவரை இராணுவத்தினர் கூட்டிச் சென்றதாகவும் இந்த விடையத்தை ஊடகங்களும் மற்றும் வேறு அரசியல் தலைவர்களுக்கும் அறிவிக்க வேண்டாம் என்று கூறிச் சென்றுள்ளனர். 

 தற்போது தாக்குதலுக்கு உள்ளான சிறுமி மற்றும் சிறுவர் கிராமவாசி போன்றோர் கிளி.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.