Breaking News

யாழ்.பல்கலையில் ஊழியர் சங்கம் போராட்டம் (படங்கள் இணைப்பு)


யாழ்.பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் எனக்கோரி பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

 பக்கச் சார்பாக நடந்த துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், அரசியல் செல்வாக்கினால் பேரவைக்குள் உள்வாங்கப்பட்ட வெளிவாரி உறுப்பினர்களை விலகுமாறு கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பல்கலைக்கழக ஊழியர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு மாணவர் ஒன்றியமும் தமது முழுமையான ஆதரவைக் கொடுத்து கலந்து கொண்டமை குறிப்பிட தக்கது.

அதே வேளை இன்றைய போராட்டம் மூலம் உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டங்களில் குதிக்க உள்ளதாக மாணவர் ஒன்றியம் ,மற்றும் ஊழியர் சங்கம்  அறிவித்துள்ளது..