Breaking News

மகிந்த ஒரு பூதம் - சம்பிக்க

மகிந்த ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு, தேவையான நிதி பெற்று கொள்வதற்காக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் நட்டமடையும் நிறுவனமாக மாறியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ இலங்கை கனிய எண்ணெய் களஞ்சியசாலையில், நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.கனியவளக் கூட்டுத்தாபனம் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுகள் இருந்தன. பணம் உண்ணும் பூதம் என வர்ணித்தார்கள். ஆனால் அந்த நிறுவனம் பணம் உண்ணவில்லை.

ராஜபக்ஷ நிர்வாகத்தினர் வருமானம் ஈட்டிக்கொள்வதற்காகவே கனியவளக் கூட்டுத்தாபகம் பொதுமக்களின் பணத்தை சுவீகரித்தது.எரிபொருட்களின் மீது வரையறையற்ற வகையில் வரிசுமையை சுமத்தி, நிறுவனம் நட்டமடைந்ததாக நாட்டிற்கு காட்டினார்கள். 

 அடுத்துவரும் வரவு செலவுத்திட்டத்தில் இந்த நாடு எவ்வளவு கடன்பெற்றுள்ளது என்பது பற்றி தெரியவரும். ஜயசுந்தரவும், கப்ராலும் கடந்த 10 வருடங்களாக முன்னெடுத்த மோசடிகளை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

எனவே. இந்த பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்பதற்கு சில காலம் செல்லும். கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் சர்வதேச சந்தையில் எரிபொருட்களில் விலைகள் வீழ்ச்சியடைந்தன.
எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கும், மின்சாரத்திற்கும் நிலையான கட்டண அறவீட்டு முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம்.