Breaking News

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி இராணுவ மேஜர் போராட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணச் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அசித பிரபாத் என்ற கைதியே கடந்த 26 ஆம் திகதி முதல் சாகும் வரையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தான் உட்பட சகல அரசியல் கைதிகளுக்கும் கஷ்டங்களை ஏற்படுத்தியிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரியே அவர் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவு அடிப்படையற்ற சாட்சியங்களை கொண்டு வழக்குகளை முன்னெடுத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். ஹெந்தாவித்தாரண என்ற இராணுவ அதிகரிக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக பொய்யான வழக்கை ஜோடித்து தன்னை சிறையில் அடைத்துள்ளதாகவும் அசித பிரபாத் கூறியுள்ளார்.

இதனிடையே இலங்கை முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் 500க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் இருப்பதாக மன்னார் ஆயர் வணக்கிற்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.