Breaking News

பொலிஸ், படையினர் வசமுள்ள கைதிகளின் விபரங்கள் வெளியிடப்படும் -மனோ கணேசன்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் விபரங்களை தரும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இன்று தேசிய நிறைவேற்று சபையில் கோரிக்கை விடுத்தார்.

நேற்று காலை நிறைவேற்று சபை கூடியபோது, கடந்த வாரம் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில்,இலங்கை முழுக்க சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் விபரங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில், பொலிஸ் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு மற்றும் படைத்தரப்பு முகாம்கள் ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் விபரங்களையும் தரும்படி மனோ கணேசன் கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த தகவல்களையும் போலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சுகளிடமிருந்து பெற்று சபைக்கு சமர்ப்பிக்கும்படி, தேசிய நிறைவேற்று சபையின் செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு பணிப்புரை விடுத்தார்.