Breaking News

கோடிகளின் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய வரவு செலவு திட்டம்

புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் இடைக்கால வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதன் போது ஜனாதிபதி செயலகத்தின் கடந்த கால செலவுகள் வாசிக்கப்பட்டிருந்தது.
 இதன்படி

2008ஆம் ஆண்டு - 634 கோடி ரூபாய்
2009ஆம் ஆண்டு - 765 கோடி ரூபாய் 
2010ஆம் ஆண்டு - 5063 கோடி ரூபாய் 
2011ஆம் ஆண்டு - 5,063 கோடி ரூபாய் 
2012ஆம் ஆண்டு - 5,936 கோடி ரூபாய் 
2013ஆம் ஆண்டு - 6,244 கோடி ரூபாய் 
2014ஆம் ஆண்டு - 10,497 கோடி ரூபாய் 
2015ஆம் ஆண்டு - 9,593 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டிருந்ததாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதியின் செலவு 256 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்திருந்தார். இது இவ் ஆண்டுக்கான மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 9,337 கோடி ரூபாயினால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
அத்துடன் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனாவின் பதவியேற்புக்கு 60,000 ரூபா செலவு ஏற்பட்டதாகவும் 2009ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது பதவியேற்பு செலவு 600மில்லியன் ரூபா எனவும் தெரிவித்து அதிர்ச்சி அலையை ஏற்படுத்தினார்.