அரசாங்கத்தில் உள்ளவர்கள் விசாவை புதிப்பிக்கின்றனா் -அநுரகுமார திஸாநாயக்க,
ஜனாதிபதிக்கு உதவ வந்த அரசாங்கத்தில் உள்ளவர் காலத்துக்கு காலம் அமெரிக்க வீசாவை புதுப்பித்து வருவதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
இலங்கையின் ஒருமைப்பாடு பற்றி பேசும் அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் நீண்ட காலம் இலங்கையில் தங்கியிருக்க உத்தேசம் இல்லாதவர்களாகவே உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.எனவேதான் அவர் காலத்துக்கு காலம் அவர்கள் தமது அமெரிக்கா வீசாக்களை புதுப்பித்து வருவதாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச, டளஸ் அழகப்பெரும, சந்திம ராசபுத்ர, கோத்தபாய ராஜபக்ச போன்றோர் இலங்கையில் அதிக காலம் தங்கியிருக்கும் உத்தேசம் இல்லாதவர்களாகவே உள்ளனர்.
அமெரிக்காவில் சொத்துக்களை கொண்டுள்ள இவர்கள் 9 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியை தேர்தலில் வெற்றி பெறச் செய்யும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினர் என்றும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.