Breaking News

ஜனாதிபதித் தேர்தல் தெடா்பில் கூட்டமைப்பு எடுத்த முடிவு தவறானது

ஜனாதிபதித் தேர்தலில் ஈடுபடும் பேரினவாத சக்திகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்று தமிழரசுக்கட்சியின் பிரதி தலைவர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்த மாதம் நடைபெறும் தேர்தல் சிங்கள மக்களுக்கான தேர்தல் இதில் தமிழ் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. இருவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழ் மக்களுக்கான எந்த தீர்வு நிலைப்பாட்டையும் முன்வைக்க வில்லை. இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு தவறானது. இந்த முடிவில் பல கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. இதற்காக  சரியான தீர்வை அவர்கள் முன்வைக்கத் தவறிவிட்டனர்.  இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் பேரின வாதிகளுக்கு வாக்களிப்பது எந்த வகையில் நியாயமுடையது.  ஆகவே தமிழ் மக்கள் அனைவரும் இந்த மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் என அவர்  மேலும் தெரிவித்துள்ளாா்.