நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை இழந்தது இலங்கை அணி
இன்று இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் 390 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. இறுதி வரை போராடிய திரிமன்னே 144 பந்துகளை சந்தித்து 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டார்.
முன்னதாக சங்கக்காரவின் அபாரமான இரட்டைச்சதத்தின் உதவியுடன் 135 ஓட்டங்களால் தமது முதல் இனிங்சில் இலங்கை அணி முன்னிலை பெற்றிருந்தது. தமது இரண்டாம் இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தை சந்தித்தாலும் வோல்டிங் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு இடையில் பகிரப்பட்ட வீழ்த்தப்படாத 365 ஓட்டங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 524 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.இதில் வில்லியம்சன் மற்றும் வோல்டிங் ஆகியோர் தலா 242 மற்றும் 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு தமது இரண்டாம் இனிங்சை ஆரம்பித்த இலங்கை அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாற்றத்தை எதிர் கொண்டது. திரிமன்னே மற்றும் சில்வாவை தவிர தவிர ஏனையவர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடாதமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களினால் 365 ஓட்ட இணைப்பாட்டத்தினையும் பிரிக்க முடியாது போனமையே தோல்விக்கு முக்கியமான காரணமாகும். அத்துடன் சங்கக்கார சர்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக பந்து வீசிய கிரேய்க் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.