Breaking News

கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவை வரவேற்கின்றோம்-நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

நல்லாட்சியை நோக்கிய ஆட்சி முறை மாற்றத்திற்காக பொது வேட்பாளரை நிபந்தனை எதுவுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வந்துள்ளமையை வரவேற்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. 


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அமைப்பு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.   அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது,   தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இருப்பையும், அபிலாஷைகளையும் பலப்படுத்தும் அரசியல் வியூகத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை கூட்டமைப்பின்  இந்த அரசியல் தீர்மானம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. 

 2013ல் இடம்பெற்ற வடமாகாண சபை தேர்தலின்போது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றின் அடிப்படையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டது.   மூலோபாய ரீதியாக இந்த அரசியல் நகர்வு முக்கியத்துவம் வாய்ந்தது. 

ஜனவரி 8 ஆந் திகதிக்குப் பின்னர் ஏற்படவுள்ள புதிய அரசியல் சூழலில் இந்த அரசியல் இணக்கப்பாட்டின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.