Breaking News

ஆட்சி மாற்றத்துக்கான சின்னம் அன்னம்! அனைவரும் வாக்களியுங்கள் - மாவை

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கொடுரமான ஆட்சியின் வீழ்ச்சிக்காக வாக்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டியது காலத்தின் கடமை என தமிழரசுக்கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.


கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில், பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களுக்கான தேர்தல் தொடர்பான தெளிவரங்கு இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பா.உறுப்பினர் மாவை.சேனாதிராஜா சிறப்புரை ஆற்றியிருந்தார். அவர் தனதுரையில்,

இன்னும் சில நாட்களில் மிக முக்கியமான இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய பங்காளிக்கட்சிகள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள், சிவில் சமூகத்தை சார்ந்த புத்திஜீவிகள் என பலதரப்பட்டவர்களை சந்தித்து,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை பிரதிநிதிதுவப்படுத்தும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்க வேண்டிய முடிவு பற்றி கருத்துக்களை பெற்றிருந்த நிலையில் பொருத்தமான நேரத்தில் எமது தலைவர் இரா.சம்மந்தன் அவர்கள் கட்சியின் முடிவை அறிவித்திருக்கின்றார்.

இதன்படி நாம் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பது என்றும் அவருடைய சின்னமான அன்னத்திற்கு வாக்களிக்க தமிழ் மக்களை வேண்டுவதென்றும் அடிப்படையில் நாம் இப்பொழுது பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றோம்.

நாம் கடந்த கால வரலாற்று படிப்பினைகளின் அடிப்டையிலும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் சந்தித்திருக்ககூடிய எண்ணற்ற துயர்கள் வலிகளை நினைவில் கொண்டு நாம் எல்லோரும் மகிந்த ராஜபக்சவின் இந்த கொடுரமான ஆட்சியின் வீழ்ச்சிக்காக வாக்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டியது காலத்தின் கடமை.

இந்த தேர்தலை பகிஸ்கரிபோமாயின், மறைமுகமாக சர்வாதிகார மகிந்த ராஜபக்சவின் பக்கம் ஆதரவு அளித்தவர்களாக வரலாற்றுக்கறையை சுமக்க வேண்டி ஏற்படும்.

எனவேதான் நாம் எல்லோரும் மைத்திரிபால சிறீசேனாவின் அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியது அவசியம். சிங்கள மக்களின் மத்தியில் இந்த நாட்டில் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் தேவை என்ற தெளிவு ஏற்பட்டிருகின்றது.

எங்களின் மத்தியிலும் அந்த எண்ணம் என்றுமே மனதிலே நிறைந்து  இருக்கின்றது.மகிந்த ராஜபக்ச இதுவரையிலும் எ;மை போராலே நசுக்கி எம்மை ஒரு தோற்கடிக்கப்பட்ட சமுதாயமாக தோற்றுப்போன சமுதாயமாக மாற்ற அடிமைப்படுத்த தொடர்ந்து நினைத்து வந்தபோதும் நாம் எதிர்கொண்ட தேர்தல்களில் எல்லாம் நாம் தோற்றுப்போகவில்லை என்பதை சர்தேசத்துக்கும் அடித்துரைத்திருக்கின்றோம்.

இப்பொழுதும் எமது முடிவும் வாக்களிப்பும் முக்கியமானது என்பது என்பதையே தெரிவிக்கின்றது. இந்த நாட்டிலே நீதித்துறை சீரழிக்கப்பட்டிருக்கின்றது.

இரண்டு தடவை ஆட்சியிலே இருந்த மகிந்த ராஜபக்ச இந்த நாட்டிலே நீதித்துறையை  தன் சர்வாதிகார பிடிக்குள் வைத்துக்கொண்டு மூன்றாவது தடவையும் தான் ஜனாதிபதியாக வருவதற்கு முனைகின்றார்.

இந்த சர்வாதிகாரத்தனத்தை இல்லாதொழித்து நாம் இந்த நாட்டில் அமைதியா சுதந்திரமாக உரிமையுடன் கூடிய வாழ்வை வாழ்வதற்குரிய ஜனநாயக சூழலை ஏற்படுத்த ஆட்சி மாற்றத்திற்கான சின்னமான அன்னத்திற்கு வாக்களிப்போம் என எமது தமிழ் மக்களை வேண்டி நிற்கின்றோம். என தெரிவித்தார்.