வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த ஆட்சி வேண்டாம் - ஹக்கீம்
வடக்கு - கிழக்கு ஒன்றிணைந்த ஆட்சி என்ற கோரிக்கையை முன்வைக்க தமது கட்சிக்கு எந்தவொரு தேவையும் இல்லை எனவும், தமக்குத் தேவை நல்லாட்சியே என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது தமது கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தீர்மானித்தமையினாலேயே எனவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகியதன் பின்னர், பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்கள் தம் மீது சுமத்தப்படுவதாகவும் ரவூப் ஹக்கீம் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.