பொருட்களுக்கான விலைகளை குறைக்க முடியாது - இறக்குமதிச் சங்கம்
அத்தியாவசிய உணவு பொருட்கள் 13ற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விலை குறைப்பிற்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாது என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிச் சங்கம் தெரிவிக்கின்றது.
அதற்கு காரணம் டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதே என தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் குறித்த உணவு பொருட்கள் சிறிதளவிலே குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை வரவு செலவு திட்டத்தின் வழங்கிய விலை குறைப்பிற்கு ஏற்றவாறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதற்கு விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது என வாடிக்கையாளர் சேவை அதிகாரி தெரிவிக்கின்றார்.அதற்காக மாவட்ட செயலகம் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.