Breaking News

பொலிஸ் இடமாற்றங்களை ரத்துச் செய்ய மைத்திரி அரசு முடிவு

மகிந்த அரசின் நிர்வாகத்தில் இடம்பெற்ற பொலிஸ் இடமாற்றங்களை ரத்துச் செய்ய மைத்திரி அரசு தீர்மானித்துள்ளது. 

 மகிந்த ராஜபக்‌சவின் ஆட்சிக் காலத்தில் அவருக்குத் தேவையான முறையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக தேர்தல் அண்மித்த நிலையிலும் குறித்த இடமாற்றங்கள் நடைபெற்றிருந்தது. எனினும் குறித்த இடமாற்றங்களின் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

 மேலும் இதுவரை முறைகேடாக செய்யப்பட்ட இடமாற்றங்கள் அனைத்தும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தமது முன்னைய பணியிடங்களுக்கு மீள அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ