அரசாங்க சொத்துக்களை விற்கவில்லை – ஜனாதிபதி
தாம் அரசாங்கத்தின் சொத்துக்கள் எவற்றையும் விற்பனை செய்யவில்லை என்று, ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெல்மடுல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக்கூறியுள்ளார்.தாம் எந்த அரசாங்க சொத்துக்களையும் விற்பனை செய்யவில்லை.
அவ்வாறு ஏனையோரால் விற்பனை செய்யப்பட்ட அனைத்தும் மீளப் பெறப்பட்டுள்ளது.ஆனால் எதிர்கட்சி ஏனைய தரப்புடன் இணைந்து நாட்டின் துறைமுகம், விமான நிலையம் என அனைத்தையும் விற்பனை செய்வதற்கான சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளது.இதற்கான மெகா-டீல் ஒன்றை எதிர்கட்சிகள் உருவாக்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.