Breaking News

பிரதி அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க எதிரணியில் இணைந்தார்

உயர்கல்வி பிரதி அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே நேற்றையதினம் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சராக இருந்த பைசர் முஸ்தபா மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.