மைத்திரி - ரணில் ஒப்பந்தம் - சட்ட நடவடிக்கை
மைத்திரி – ரணில் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என்று சுகாதார அமைச்சர் திஸ்ச அத்தநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் அவருக்கு சட்டத்தின் படி தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸ இதனை தெரிவித்தார்.எமது சகோதர தொலைக்காட்சியான ஹிரு தொலைக்காட்சியில் நேற்று இரவு இடம்பெற்ற பலய அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்குகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர் என்று சொல்லப்படுவது பொய்யானதாகும்.இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.