Breaking News

பிரபாகரன் உயிரிழந்தமை தொடர்பில் தமிழர் குழம்பவில்லை - கே.வி.தவராசா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தமைக்கான எந்தவொரு சட்டப்பூர்வமான ஆதாரங்களையும் இலங்கை அரசு வெளியிடவில்லை என மூத்த சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். 

கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக அன்றைய மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு அறிவித்திருந்தது.

இருப்பினும் பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டப்பூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை என்று மூத்த சட்டத்தரணி கே.வி.தவராசா வெளிநாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவரின் மரணம் தொடர்பாக இலங்கை அரசு தரப்பில் குழப்பம் இருக்கிறது. அவர்கள் கூறியதற்கான ஆதாரங்களை இதுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை. ஆனால் இந்த விடயத்தில் தமிழர்கள் குழம்பவில்லை. மாறாக பல அரசியல் தலைவர்கள்தான் குழம்பிப் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.