அணித் தலைவர் பதவிகளில் இருந்து தூக்கப்படும் மகிந்தவின் புதல்வர்கள்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், இலங்கை கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச இலங்கை கடற்படையின் ரக்பி அணியின் தலைவராகவும், இளைய மகன் ரோகித ராஜபக்ச இலங்கை இராணுவ ரக்பி அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
தற்போது இவர்களை இந்தப் பதவிகளில் இருந்து நீக்குமாறு உயர்மட்டத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.எனினும், ரக்பி அணிகளில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான தகவல் இவர்களுக்கு இன்னமும் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.