Breaking News

மக்களின் பசியை தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டது – ரத்தனதேரர்

பாரிய சூதாட்ட நிறுவனங்களுக்கு நிவாரணங்களை வழங்கிய அரசாங்கம், சாதாரண மக்களின் உணவுத் தேவையை பூர்த்திசெய்யவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் அதுரலியே ரத்தன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.உலகின் மிகப் பிரபலமான சூதாட்ட நிறுவன சொந்தக்காரரான ஜேம்ஸ் பாக்கர் இலங்கையில் தமது நிறுவனத்தை ஆரம்பிக்க அரசாங்கம் சலுகைகளை வழங்கியுள்ளது.

ஆனால் எரிவாயும், பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான வரிகளை அதிகரித்து, மக்களை கண்டுக் கொள்ளாமல் விட்டுள்ளது.இதன் காரணமாகவே இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தாங்கள் தீர்மானித்ததாக அவர் கூறியுள்ளார்.