வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, புதிதாக உள்நாட்டு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரவைப் பேச்சாளர், ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “அனைத்துலகத் தர நியமங்களுக்கு ஏற்ப, ஐ.நாவினால் ஏற்றுக் கொள்ளத்தக்க உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பது குறித்து நாம் சிந்திக்கிறோம்.
இது புதிய உள்நாட்டு விசாரணையாக இருக்கும்.தேவைப்பட்டால் இந்த விசாரணையில் சில வெளிநாட்டு நிபுணர்களின் உதவிகளையும் நாம் பெற்றுக் கொள்வோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.