Breaking News

தடைகள் நீக்கம்! ஷிராணி பண்டாரநாயக்கவே பிரதம நீதியரசர்

இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் 43வது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக இருக்க காணப்பட்ட அனைத்து தடைகளும் நீக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அவர் மீண்டும் பிரதம நீதியரசராக செயற்படுவதாகவும் நாளை (29) ஓய்வு பெறுவார் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார். அதன்படி, புதிய பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் நியமிக்கப்படலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, ஷிராணி பண்டாரநாயக்க மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று 28ம் திகதி தொடர்ந்தும் கடமையை பொறுப்பேற்கலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே அவர் இன்று நீதிமன்றம் சென்று கடமைகளை பொறுப்பேற்றதாகவும் அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.