Breaking News

ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு. (அறிக்கை இணைப்பு)


யாழ்.பல்கலைக்கழகப்பேரவையைத் தூய்மைப் படுத்துதல் என்ற கருப்பொருளில் நாளை சனிக்கிழமை காலை8.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை பல்கலைக்கழக முன்றலில் போராட்டத்தினை மேற்கொள்வுள்ள யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திற்கு ஆதரவளிப்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

உடனடியாக பேரவையின் வெளிவாரி  உறுப்பினர்களை பதிவியில் இருந்து விலகுமாறும், அப்படி விலகாத பட்சத்தில் பல்கலைக்கழக அனைத்து மாணவர்களையும் ஒன்றினைத்தி மாபெரும் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.