முச்சக்கரவண்டி கட்டணங்களும் குறைப்பு
எதிர்வரும் முதலாம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் 10 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
தனியார் பாடசாலை வேன் கட்டணங்கள் 5 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. அண்மையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.