மைத்திரியின் அரசில் அமைச்சுப் பதவிகளை கூட்டமைப்பு ஏற்காது – சுமந்திரன்
மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகள் எதையும் ஏற்காது என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும், அரசியலமைப்புத் திருத்த செயல்முறையில், தீவிர பங்காற்றுவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.“இந்த விடயம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.எனினும், எனது தனிப்பட்ட கருத்தின் படி, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், அவரது அரசாங்கத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கக் கூடாது.எவ்வாறாயினும், 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும், ஆலோசனைக் குழுவில் நாம் இணைந்து கொள்வோம்.
புதிய அரசாங்கத்தில் ஜேவிபியும் இதேபோன்ற பங்கைத் தான் வகிக்கவுள்ளது.நாடு தற்போது சர்வாதிகாரத்தை எதிர்கொண்டுள்ளது. இது தான், நாம் எதிரணியின் பொதுவேட்பாளரை ஆதரிப்பதற்கு முடிவெடுத்தமைக்கு முக்கியமான காரணம்.
.இரண்டாவதாக, ஜனநாயகம், மற்றும் நீதித்துறை சுதந்திரம் என்பன பாதிக்கப்பட்டுள்ளனதமிழ் மக்களைப் பாதிக்கும் இந்த தேசியப் பிரச்சினைகள் குறித்தும் நாம் கவனத்தில் கொண்டுள்ளோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.