தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சவாலை சந்திக்கிறது - யுரேசியா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானமானது முக்கியத்துவம் வாய்ந்தது என்று, சர்வதேச அரசியல் விமர்சன குழுவான யுரேசியா ரிவீவ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தன் முரண்பாட்டுத் தீர்வு திணைக்களத்தின் தலைவர் கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்களன் இந்த குழுவின் இணையளத்தத்தில் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டும் என்றும், அல்லது மௌனிக்க வேண்டும என்றும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன.அத்துடன் இரண்டு பிரதான வேட்பாளர்கள் தொடர்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30ம் திகதி, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்திருந்தது.இந்த அறிவிப்பின் மூலம், இலங்கையில் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் உருவாக்கப்படுமாக இருந்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் பிரதிநிதித்துவப் படுத்தும் சமுகத்துக்கான பாரிய பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
ஆனால் ஒருவேளை இந்த தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்திருந்தால், தேசிய அரசியலில் கூட்டமைப்பு தனிமை படுத்தப்பட்டிருக்கும் என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த தீர்மானத்தினால், தமிழ் தேசிய கூட்டமைப்பு பல சவால்களையும் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியின் உள்ளே முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் இந்த கோரிக்கையில் தீவிரவாக இருக்கின்றனர்.இந்த நிலையில் கட்சி பிளவடையாமல் பார்த்துக் கொள்வதும், கூட்டமைப்பின் முன்னால் உள்ள பிரதான சவால் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 2013ம் ஆண்டு இடம்பெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் பெற்றுக்கொண்ட 80 சதவீதமான வாக்குகளை, மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டும் பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக மேற்கொண்ட தீர்மானம் காலம் தாழ்ந்த நிலையிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் கூட்டமைப்பின் இந்த 80 சதவீத வாக்குகளை பெற்றுக் கொள்ளும் இலக்கு, அதற்கான இரண்டாவது சவாலாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.