இலங்கை மீதான தடையை நீக்க கால தாமதாகும் -ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கை மீன் ஏற்றுமதிக்கு எதிராக விதித்துள்ள தடையை நீக்க சில மாதங்களாகும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர ஐரோப்பிய ஒன்றிய சமுத்திரங்கள் மற்றும் மீன்பிடி தொடர்பான ஆணையாளருடன் அண்மையில் கலந்துரையாடியதாக தெரியவந்துள்ளது.
இதன்போது மீன் தயாரிப்புகளுக்கான தடையை நீக்க இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளதோடு சட்டவிரோத மீன்பிடியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை இந்த தடை நீக்கப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளது.