Breaking News

அதிகாரப் பகிர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - கனடா

தமிழ் பிரதேசங்களுக்கு அதிகாரப் பகிர்வகளை வழங்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ளது.

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.இந்த மாதம் வெற்றிகரமாக இடம்பெற்று தேர்தல் ஒன்றின் மூலம் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பூர்த்தி செய்வார் என்று கனடா எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்கி, சுதந்திரமாகவும், சகல உரிமைகளுடனும் அவர்களை வாழ வைக்க வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

அதேநேரம் வடமாகாணத்துக்கு சிவில் பிரதிநிதி ஒருவரை ஆளுனராக நியமித்தமை வரவேற்கத் தக்க விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.