புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல் திகதி அறிவிப்பு
வன்னியின் புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மீள்குடியேற்றங்களை காரணம் காட்டி இந்த பிரதேச சபைகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.இந்தநிலையில் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதியன்று இந்த பிரதேச சபைகளின் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது