Breaking News

சந்திரிக்காவை கண்டிக்கும் கோத்தபாய

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என கூறியதை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கண்டித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியிருந்தார்.இலங்கையின் பொது மக்கள் 90 ஆயிரம் போரையும் சுமார் 30 ஆயிரம் இராணுவத்தினரையும் கொலை செய்தனர்.சுமார் 50 ஆயிரம் இராணுவத்தினரை அங்கவீனமாக்கினர். அன்று இலங்கை மத்திய வங்கியை அழித்தனர்.

விடுதலைப் புலிகள் எங்கு தாக்குதல்களை நடத்தவில்லை?. அனைத்து இடங்கள் மீது தாக்குதல்களை நடத்தினர்.இதற்கு பொறுப்பான பயங்கரவாதி பிரபாகரனை மக்கள் மறக்கும் செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்துள்ள நிலையில், பல வருடங்களின் பின்னர் இந்த தலைவி யாழ்ப்பாணத்திற்கு சென்று பிரபாகரன் ஜயா என்று கூறுகிறார்.

யாரது தேவைக்காக எதற்காக அவர் பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என்கிறார்.பிரபாகரனை நாங்கள் மறக்க செய்ய முயற்சிக்கும் போது இவர்கள் மீண்டும் அவரை வீரனாக மாற்ற முயற்சித்து வருகின்றனர் எனவும் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.