Breaking News

மகிந்த அரசுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்- ரணில்

மகிந்த அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


மொரட்டுவ பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ பிரதேசத்தில் நிலவி வரும் அழுத்தங்களை இல்லாமல் செய்ய மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்கவும்.மீன்பிடித்துறை, தச்சுத்துறை போன்றவற்றுக்கு இன்று சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது.மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களினால் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் 8ம் திகதியுடன் இந்த ஆட்சியாளர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்தேன்.

இங்கிருக்கின்ற சிலர் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்தீர்கள். எனினும் இம்முறை தேர்தலில் நாம் அனைவரும் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என ரணில் விக்ரமசிங்க மக்களிடம் கோரியுள்ளார்.