இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் - தமிழக முதல்வர்
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்த மத்திய அரசின் கொள்கையை கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னும் நிலைமை சீரடையவில்லை. இத்தகைய சூழலில் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பு அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்திவைப்பதே சரியானதாகும். இலங்கையில் சமீபகாலமாக நிலவும் அரசியல் மாற்றம் சில நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தமிழர் பகுதியில் இன்னும் இலங்கை இராணுவத்தினர் இருப்பது தயக்கத்தை ஏற்படுத்துகிறது. இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்ற புதிய அரசின் வாக்குறுதி செயல்பாட்டுக்கு வரும்போது இங்கிருக்கும் தமிழ் அகதிகளுக்கும் தாயகம் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் உதயமாகும் என தமிழக முதல்வர் இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.