பிணக்காடாய் மாறிய ஜாவா கடல் (காணொளி)
விபத்தில் சிக்கிய ஏர் ஏசியா விமானத்திலிருந்து 46 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான க்யூஇசட்8501 ஏர் ஏசியா விமானத்திலிருந்து, தற்போது 46 சடலங்கள் மற்றும் அதன் சில உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விமான போக்குவரத்து இயக்குனர் கூறுகையில், எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தையும் விமானத்தின் பெரிய பாகங்கள் இரண்டையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
நாங்கள் தேடிக்கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் தான் இவை என்பதை உறுதியாக என்னால் கூற முடியும் என்றும் தற்போது மீட்கப்பட்டுள்ள 46 பேரில் 4 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.