ஆணா, பெண்ணா என்பதை வேறுப்படுத்தவே மிஸ்டர் பிரபாகரன் எனக் குறிப்பிட்டேன் -சந்திரிக்கா
ஆணா அல்லது பெண்ணா என்பதை வேறுப்படுத்தி குறிப்பிடவே தான் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை ஆங்கிலத்தில் மிஸ்டர் பிரபாகரன் எனக் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மிஸ்டர் மற்றும் மிஸ் ஆகிய இரண்டு வார்த்தைகள் ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிய ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் எனது ஆட்சிக்காலம் முழுவதும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக போரிட்டேன். எனது ஆட்சியின் போதே யாழ்ப்பாணம் மீட்கப்பட்டது எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையும் மகிந்த ராஜபக்ஷ உட்பட அவரது குடும்பத்தினருக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
அத்துடன் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது தோல்வியை ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார்.விடுதலைப் புலிகளின் தலைவர்கள் குமரன் பத்மநாதன், கருணா அம்மான் போன்றவர்கள் அரசாங்கத்துடனேயே தற்போது இருக்கின்றனர் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.