பேரவையைத்தூய்மைப்படுத்துதல்! யாழ்.பல்கலையினில் நாளை போராட்டம்
யாழ்.பல்கலைக்கழகப்பேரவையைத் தூய்மைப் படுத்துதல் என்ற கருப்பொருளில் நாளை சனிக்கிழமை காலை8.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை பல்கலைக்கழக முன்றலில் போராட்டத்தினை மேற்கொள்வதென யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டு பல்கலைக்கழகப் பேரவையைத் தூய்மைப்படுத்தும் முயற்சிக்குத்தங்கள் ஒத்துழைப்பினை நல்குமாறு பல்கலைக்கழக சமூகத்தினரையும் பல்கலைக்கழக நலனில் அக்கறை கொண்டோரையும் யாழ. பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரியுள்ளது.
27 அங்கத்தவர்களைக் கொண்ட யாழ். பல்கலைக்கழகப் பேரவை 14 வெளிவாரி உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பல்கலைக்கழக சட்டம் 1985 பிரிவு 44(1) கல்வி, தொழில்சார் நிபுணத்துவம், வர்த்தகம், கைத்தொழில், விஞ்ஞான, நிர்வாகவட்டங்களில் கௌரவிக்கத்தக்க வகையில் சேவையாற்றியோரிடமிருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவால் வெளிவாரி உறுப்பினர்களானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.