மைத்திரி ஆட்சியின் கீழ் பயங்கரவாதம் தலைதூக்காது - பொன்சேகா
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எவ்வித சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என படை வீரர்களிடம் கோருகின்றேன்.அரசியல் அடிவருடிகளான சில உயர் அதிகாரிகள் தேர்தல் விதிகளை மீறுமாறு உத்தரவிட்டாலும் படையினர் அதனை ஏற்கக் கூடாது.நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்த நான், படையினரிடமிருந்து அர்ப்பணிப்பை எதிர்பார்க்கின்றேன்.
நாட்டின் இறையாண்மை எப்போதும் இருக்க வேண்டுமென நான் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் நான் கோரி வருகின்றேன்.2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனை தேர்தல் விஞ்ஞாபனத்தில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றே மஹிந்த குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் 29ம் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.எமில்காந்தன் என்ற புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய நபருக்கு பணம் வழங்கி வடக்கு மக்கள் வாக்களிப்பில் பங்கேற்பதனை ஜனாதிபதி தடுத்து நிறுத்தினார்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான குமரன் பத்மநாதன் மற்றும் கருணா அம்மான் போன்றவர்கள் நல்லவர்கள் என அரசாங்கம் கூறி வருகின்றது.புலிகளை தோற்கடிக்க பல்வேறு அர்ப்பணிப்புக்களுடன் போராடியிருந்தேன் என சரத் பொன்சேகா செய்தியாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்.