குமார் குணரட்ணம் கைதுசெய்யப்படலாம்!
ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டால், முன்னிலை சோசலிஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரட்ணம் கைதுசெய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் கூற்றுப்படி குமார் குணரட்ணம் அரசியலில் ஈடுபட வேண்டுமாயின் தமது அனுமதியை பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குணரட்ணம், 30 நாள் சுற்றுலா வீசாவிலேயே இலங்கை வந்துள்ளார்.எனவே அவரால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. இந்தநிலையில் நாளை கடவத்தையில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் குணரடணம் உரையாற்றவிருந்தார்.எனினும் அங்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக முன்னிலை சோஸலிஸக் கட்சியின் பேச்சாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2012ல் குணரட்ணம் இலங்கைக்கு வந்திருந்த போது வெள்ளைவான் ஒன்றினால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு நாடும் கடத்தப்பட்டார்.