Breaking News

மக்களை ஏமாற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபட வைத்த மகேஸ்வரி நிதியத்தினர்.(படங்கள் இணைப்பு)


வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த வருமாறு அழைக்கப்பட்ட மக்களை 'மகேஸ்வரி நிதியம் சட்டரீயானது' என்று எழுதப்பட்ட பதாதையின் கீழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த முயன்றுளளனர்
.

 மகேஸ்வரி நிதியத்தைச் சேர்ந்த சிலர். இதை அவதானித்த பொதுமக்கள் தாம் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை அறிந்து அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்தச் சம்பவம் இன்று மருதங்கேணிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. மகேஸ்வரி நிதியம் சட்டபூர்வமானது என்றும் அனுமதியுடனேயே மணல் ஏற்றுகிறது என்றும் தெரிவித்து பதாதைகளை சிலர் ஏந்தி தொடர்ந்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.