நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மலிங்க, குலசேகர
நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் மலிங்க, குலசேகர ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளின் போது நுவான் குலசேகர இலங்கை அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.
இந்நிலையில் இம் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க நுவான் குலசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காயம் காரணமாக சிகிச்சை பெற்று ஓய்விலிருந்த மலிங்கவும் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை அணியின் பயிற்சியாளர் மார்வன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 7 ஒருநாள் போட்டிகள் இம் மாதம் 11 ஆம் திகதி கிறைஸ்ட்சேர்சில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.