Breaking News

காணாமல் போனவர்களின் உறவினர்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு (காணொளி இணைப்பு)

கடந்த காலங்களில் இலங்கையில் தனிநபர்கள் கடத்தப்பட்டு, காணாமல் போன நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற்றிருந்தது.

அரச தரப்பின் முக்கியஸ்தராக இருந்த கோத்தபாய ராஜபக்‌ஷவே இந்தக் கடத்தல்களின் பின்னணியில் இருந்ததாக பரவலான தகவல்கள் வெளியாகியிருந்தன. காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க அவர்களின் உறவினர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தது. மேலும் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். 

இந்நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் தேர்தலில் தோல்வியடைந்து, மைத்திரி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பான கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.இதன் ஒரு கட்டமாக காணாமல் போன தங்களது உறவினர்களை தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பொதுமக்கள் குழுவொன்று இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இவர்களுக்கான வழிகாட்டுதல்களை முன்னிலை சோசலிஸக் கட்சியின் முக்கியஸ்தர் துமிந்த நாகமுவ வழங்கியிருந்தார்.