மஹிந்தவுக்கு இதுவே கடைசி ஆட்சி - அத்துரலிய ரத்ன தேரர்
இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 80 வீதமான மக்கள் ஆதரவு இருக்கின்றது. அவர்களுடன் நாங்கள் பகிரங்கமாக பேசுவதற்கு உரிமை உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே அவர்களும் இலங்கை மக்களின் பிரதிநிதிகள், நாங்கள் ஏன் மறைமுகமாக ஒப்பந்தம் செய்ய வேண்டும். சிங்கள் மக்களும் தமிழ் மக்களும் சேர்ந்து வாழ்வதற்கு விரும்புகின்றனர்.
மஹிந்தவின் வீட்டு உரிமை பத்திரத்துக்கும், நகைகளுக்கும் சாதாரண தமிழ் மக்கள் சோரம் போக மாட்டார்கள். அவர்கள் தமிழ் தலைமைகளுக்கு மதிப்பளிக்கின்றனர், தலைமைகளும் சிந்தித்து செயற்பட வேண்டும்.
அரசாங்கம் எத்தனை மில்லியன் பணம் செலவு செய்தாலும் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க முடியாது.மஹிந்தவுக்கு இதுவே கடைசி ஆட்சி, பெட்டிகளை கட்டி தயாராக இருப்பதே சிறந்தது என கூற விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.