தேர்தல் தினத்தன்று வடக்கில் கலவரங்கள் இடம்பெறக் கூடும்
ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று வடக்கில் கலவரங்கள் இடம்பெறக் கூடுமென எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வடக்கில் குழப்பங்களை விளைவித்து தேர்தலை குழப்ப முயற்சிக்கப்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர்கள், தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
வடக்கில் தேர்தல்கள் சுயாதீனமான முறையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென கோரியுள்ளனர்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவை தலைவர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.அண்மையில் தேர்தல் ஆணையாளருடன் இரண்டு மணித்தியாலம் வடக்கு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலை சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் நடாத்த சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.வாக்குச் சாவடிகளுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.