ஐ.பி.எல் ஆட்ட நிர்ணயம் குறித்து தோனி கருத்து
இந்திய பிரிமியர் லீக் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் இந்திய கிரிக்கட் அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி முதல் தடவையாக தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஐ.பி.எல். ஆட்ட நிர்ணய சதி தொடர்பிலான விசாரணைகளின் போது பிரதானமாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பற்றியே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.அணியின் முகாமையாளர் குருநாத் மெய்யப்பன் மற்றும் அவரது மாமனாரான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவருக்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
குறித்த ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டிருந்த 13 போட்டியாளர்கள் தொடர்பான விபரங்கள் முத்திரையிடப்பட்ட ஆவணத்தின் ஊடாக இந்திய உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதில் மஹேந்திர சிங் தோனியின் பெயரும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.