உலக கிண்ண நடுவர்கள் அறிவிப்பு
அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாடுகளுக்கான சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் கிரிக்கட் அணி இன்று நியுசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனிலும், இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி நேப்பியரிலும் இடம்பெறவுள்ளன.
நியுசிலாந்து அணி ஏற்கனவே இலங்கை அணியுடன் இடம்பெற்ற சர்வதேச ஒருநாள் தொடரில் 4 க்கு 2 என்றவகையில் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான நடுவர்களையும், மத்தியஸ்தர்களையும் சம்மேளனம் நேற்று அறிவித்துள்ளது.குறித்த போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 29 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாடுகளில் இடம்பெறவுள்ளன.
Marais Erasmus மற்றும் Nigel Llong ஆகியோர் இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆரம்ப போட்டியில் போது கள நடுவர்களாக செயற்படவுள்ளனர்.S.Ravi மற்றும் Simon Fry ஆகியோர் 3 ஆம் மற்றும் 4 ஆம் நடுவர்களாகவும். டேவின் பூன் போட்டியின் மத்தியஸ்தர்களாவும் செயற்படவுள்ளனர்.