Breaking News

மாவை பேசியதால் மயங்கி விழுந்தார் அனந்தி

வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று காலையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.


 தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, அனந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாலேயே அவர் மயக்கி வீழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது. 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதை அனந்தி சசிதரன் பகிரங்கமாக எதிர்த்து வந்தார். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையை சேர்ந்தவர்களுக்கும் அனந்திக்கும் இடையில் கருத்து முரண்பாடு இருந்து வந்துள்ளது. இதனையடுத்தே, மாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அனந்தியை ஏசியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.