சந்திரிக்கா படைவீரர்களின் உயி்ர்களை மதிக்கவில்லை - பிரியதர்சன யாப்பா
இலங்கையில் போரின் வெற்றிக்கு தாம் 75 வீத பங்களிப்பை செய்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வெளியிட்ட கருத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா கண்டித்துள்ளார்.சந்திரிக்காவுக்கு இந்த விடயத்தில் பேச எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு அடி முன்வைத்த பின்னர் இரண்டு அடிகள் பின்வைப்பதை எவ்வாறு 75வீத போர் முடிவு என்று கூறமுடியும் என்று அநுர பிரியதர்சன யாப்பா கேள்வி எழுப்பினார்.
முன்னாள் ஜனாதிபதி, சந்திரிக்கா குமாரணதுங்க படைவீரர்களின் உயிர்களை மதிக்கவில்லை.இந்த நிலையிலேயே பூநகரி மற்றும் ஆனையிறவு ஆகிய இடங்களை விடுதலைப் புலிகளுக்கு சந்திரிக்கா போரின் போது அன்பளிப்பாக வழங்கினார் என்றும் அநுர யாப்பா குற்றம் சுமத்தினார்.