Breaking News

மைத்திரிக்கு ஆதரவளித்து ஒருவர் தீக்குளிப்பு

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து நபர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.


கொழும்பு விஹார மஹாதேவி பூங்கா பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 68 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு தீக்குளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பன்னிப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு தீக்குளித்துள்ளார். மைத்திரிபாலவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு தீக்குளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை கண்டி மய்யாவ பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.சமையல் எரிவாயு கசிந்ததில் இந்த தீ ஏற்பட்டுள்ளதுடன் வீடு முற்றாக தீயில் அழிந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.