யாழ்தேவி இன்றுமுதல் காங்கேசன்துறை வரையில்
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் மட்டுப்பட்டுத்தப்பட்டிருந்த வடக்கு தொடரூந்து சேவை இன்று முதல் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையில் தமது சேவையை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.
தொடரூந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று முதல் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும் தொடரூந்து சேவைகள் இடம்பெறும் என தொடரூந்து சேவைகள் அதிகாரி எல் ஏ ஆர் ரத்ணாயக்க தெரிவித்தார்.