இலங்கையில் 77 இந்தியர்கள் பணயக்கைதிகளை போல நடத்தப்படுகின்றனர்- இந்திய அரசு
இலங்கையில் உள்ள இந்திய நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 77 இந்தியர்களையும் உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் செயற்படும் இந்திய நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 77 இந்தியர்களும் கைதிகளை போல நடத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பீஹாரை சேர்ந்தவர்களே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர். இதனையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ், குறித்த இந்திய பணியாளர்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உயர்ஸ்தானிகருக்கு பணித்துள்ளார்