Breaking News

43வது பிரதம நீதியசர் சிரானி பண்டாரநாயக்க உத்தியோகபூர்வமாக பதவி விலகுகிறார்

இலங்கையின் 43வது பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க இன்றையதினம் உத்தியோகபூர்வமாக பதவி விலகுகிறார்.

அவருக்கான பிரியாவிடையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் அரசாங்கத்தினால் அவருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டிருந்தார்.எனினும் இந்த நியமனம் சட்ட ரீதியற்றது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்து வந்ததுடன், அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டு வந்தது.

இதற்கிடையில் நேற்றையதினம் பிரதம நீதியரசராக சிரானி பண்டாரநாயக்க தமது கடமைகளை தொடர்வதற்கு நிலவிய தடைகளை அரசாங்கம் நீக்கி இருந்தது.இதன் அடிப்படையில் நேற்று அவர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றிருந்தார்.இந்த நிலையில் இன்றையதினம் அவர் பதவி விலகுவதுடன், அவருக்காக சட்டத்தரணிகள் சங்கம் பிரியாவிடை வழங்குவதற்கான நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.